பாடசாலை மாணவிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய  47 வயதினை உடைய பிரதி அதிபர் கைது!

அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினோராம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அப் செயலி ஊடாக தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ் விடயத்தினை கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் இதனை  தெரிவித்துள்ளது.

 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தயான பிரதி அதிபரே ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ் அப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பள்ளி காலத்தில் மாணவி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்

மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பிய நிர்வாண புகைப்படங்களை மாணவியின் தாயார் பார்த்ததாகவும், அது குறித்து தனது மகளிடம் கேட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் தாயும் மகளும் கம்பஹா காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்ததை அடுத்து  அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

Previous articleவீதியால் சென்ற 19 வயதான யுவதிதுஷ்பிரயோகம்
Next articleயாழில் ஒழுங்கைக்குள் நடக்கும் அக்கிரமங்கள் !