யாழில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

யாழ். – நல்லூர் அரசடி வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 70 வயதான நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காசிப்பிள்ளை பொன்ராசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த ஐந்து நாட்களாக காணமல்போய் தேடப்பட்டு வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

அவரின் வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் பழுதடைந்து, துர்நாற்றம் வீசப்படும் நிலையில் சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் இன்னும் வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை பிரித்தானியாவில் சடலமாக மீட்பு!
Next articleயாழில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மனைவி மீது வாள்வெட்டு!