இலங்கையில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது!

இலங்கையில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ‘பூரு மூனா’ என அழைக்கப்படும் ரவிந்து சங்க டி சில்வா அவிசாவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் (17-03-2023) அவிசாவளை நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் காரில் காத்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்

மேலும் மேல்மாகாண தெற்குப் பிரிவு பொலிஸாரினால் சந்தேகநபருக்கு எதிராக அவிசாவளை நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தில் உணவகம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக ‘போரு மூனா’ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 2023 பெப்ரவரி 24 ஆம் திகதி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்பட்டார், ஆனால் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், பின்னர் அவர் விமான நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல இரண்டு பௌத்த பிக்குகள் உதவியிருந்தார்.

மேலும், 28 வயதான சந்தேகநபர் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கொலைகளில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கிய ஹொரணை, மில்லனிய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது.