பொலிசாருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு!

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டங்களை நடத்தினால், தேர்தல் சட்டத்தின் கீழ் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் கலைக்க பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் இது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் நாட்டில் பொலிஸ் பிரிவுகளுக்கு தேவையான கலகத் தடுப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொலிஸாரின் அனுமதியின்றி நடத்தப்படும் அனைத்து ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களை கலைக்கும் போது இடையூறு விளைவிப்பவர்களை கைது செய்யுமாறும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  அவை அனைத்தையும் தேர்தல் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Previous articleவிரைவில் புதிய அமைச்சரவை நிஜமனம்
Next articleஅழகிய சேலையில் கோவிலுக்குள் பாவனி ரெட்டி