யாழில் 14 வயது பாடசாலை சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் கைது !

யாழில் 14 வயது சிறுமியுடன் கும்பம் நடத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிறுமி மீட்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இளைஞர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

14 வயதுடைய சிறுமி பாடசாலைக்கு செல்லவிருந்த போது, ​​இளைஞர் அவளை தூக்கிக்கொண்டு புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரால் தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்று சிறுமியை மீட்டு இளைஞரை கைது செய்தனர்.

மேலும், இருவரையும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஅழகிய சேலையில் கோவிலுக்குள் பாவனி ரெட்டி
Next articleயாழில் முழுமையாக இராணுவத்தினர் வசமான பாடசாலை! வெளியான காரணம் !