யாழில் தங்கையை சீரழித்த அண்ணன் கைது !

யாழில் தங்கையை சீரழித்த அண்ணனை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

இதன் காரணமாக அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

22 வயதுடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பரில், தங்கை கர்ப்பமானதால், அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை அழிக்க முயன்றார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேக நபர் தனது தங்கையின் கர்ப்பத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleO/L மாணவியை கவர தனது அந்தரங்க புகைப்படங்களை வட்ஸ்அப்பில் அனுப்பிய பிரதி அதிபர் கைது!
Next articleஇன்றைய ராசிபலன் 20/03/2023