யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்! புதிய அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பல தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அதிகாரிகளால் கையாளப்படும் இந்த படகு சேவைக்கு இலங்கை மாத்திரமே உதவிகளை வழங்கும் என நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்வரும் மற்றும் வெளியூர் பயணிகளுக்கான களஞ்சிய வசதிகள் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் உட்பட சுங்க மற்றும் குடிவரவு பகுதிகளை நிர்மாணிப்பதற்காக இதுவரை 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Previous articleயாழில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறப்பு!
Next articleவவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்! பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்த உத்தரவு !