வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்! பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்த உத்தரவு !

வவுனியாவில் குளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா குளத்தில் மிதந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் வவுனியா பொலிஸாரால் நேற்று (19.03) காலை மீட்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், இளைஞரின் சடலம் அடையாளம் காணப்படவில்லை. அவர் 25 முதல் 30 வயதுடையவர் என்றும் இடது கையில் அம்மா என்று பச்சை குத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கழுத்தில் சிவப்பு நூலும், ஒரு கையில் கோயில் நூலும், மறு கையில் நீலப் பட்டையும் அணிந்துள்ளார்.

எனவே இந்த இளைஞன் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு அல்லது வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Previous articleயாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்! புதிய அறிவிப்பு
Next articleவானிலை தொடர்பான முன்னறிவிப்பு!