இதுவும் இலங்கையில்தான்: திருமணம் முடித்து குடும்ப வாழ்வில்15 சிறுவன் மற்றும் 14 வயது சிறுமி!…

wading1நாட்டில் நடைமிரையில் உள்ள திருமண வயது மற்றும் கடைபிடிக்க வேண்டிய சட்டத்தை முறித்து ஆலயம் ஒன்றில் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த சிறுவனும் சிறுமியும் பொலிசாரால் கைது செய்யபட்டுள்ள சம்பவம் சாம்பூரில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யபட்டுள்ளவர்கள் சாம்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் விக்னேஷ்வரம் விசயானந்தா வும், 14 வயது சிறுமி ரவிந்திரன் மதுஷானி ஆகியோராவார்.

சம்பூர் வீரமாநகர் ஆலயம் ஒன்றிலேயே இருவரும் சட்டத்துக்கு விரோதமாக திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். சம்பூர் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இருவரும் வீடொன்றில் இருந்து கைது செய்யப்ட்டுள்ளனர்.

கைதான சிறுமி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள அதேவேளை, சிறுவன் போலீசாரால் விசாரணை செய்யபட்டு வருவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

Previous articleஸ்ருதிஹாசன் கிண்டல், லட்சுமி மேனன் பதறி வெளியேறியது ஏன்?
Next articleமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவிலிருந்து மீழ்ச்சி காணுமா…?