இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

உலக அளவில் எரிபொருள் வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் இலங்கையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களினால் இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த வாரத்தில் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 72.47 அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது 2021 நவம்பர் 28 இற்குப் பிறகு மிகக் குறைவானதாகும்.

மேலும், கடந்த வாரத்தில், Silicon Valley Bank மற்றும் Signature Bank ஆகிய இரு அமெரிக்க வங்கிகளின் சரிவுடன், எரிபொருள் விலை குறைந்துள்ளது.