புகார் கொடுக்க சென்ற பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி

புகார் கொடுக்க வந்த பெண்ணை பொலிஸ் நிலையத்தில் வைத்து கற்பழித்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடந்து வருகிறது.

பெங்களூரு கொடிகேஹள்ளி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வீரேந்திர பாபு என்பவர் அறிமுகம் ஆனார்.

அவர் அந்த பெண்ணிடம் ரூ.15 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். ஆனால் பணத்தை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டாலும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண், வீரேந்திர பாபு மீது புகார் அளிக்க கொடிகேஹள்ளி பொலிஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜண்ணாவிடம் புகார் அளித்தார்.

அப்போது அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று கொண்ட ராஜண்ணா, அவருக்கு அடிக்கடி செல்போனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் ராஜண்ணா, அந்த பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்தார்.

பின்னர் அங்கிருந்த அறைக்கு அழைத்து சென்று அவரை கற்பழித்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண், துணை பொலிஸ் கமிஷனர் லட்சுமி பிரசாத்திடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி எலகங்கா பொலிசாருக்கு அவர் உத்தரவிட்டார். எலங்கா பொலிசார் வழக்குப்பதிவு செய்து ராஜண்ணாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், பொலிஸ் நிலையத்தல் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், ராஜண்ணா மீது லஞ்ச குற்றச்சாட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. 

Previous articleயாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட 19 வயது யுவதி
Next articleகனடாவின் கல்லூரி ஒன்றில் சீக்கிய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல்