இலங்கையின் தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச நானயதிதியத்தின் கடன் வசதிகாணன் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விடவும் இன்றைய தினம் (21-03-2023) உயர்வடைந்துள்ள நிலையில்

மேலும் நேற்றைய தினம் (20-03-2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதி 331 ரூபா 71 சதமாக காணப்பட்டதுடன், அதன் இன்றைய பெறுமதி 316 ரூபா 84 சதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி நேற்றைய தினம் 349 ரூபா 87 சதமாக காணப்பட்ட பின்னணியில், இன்றைய தினம் அது 334 ரூபா 93 சதமாக பதிவாகியுள்ளது.

மேலும், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், தங்கத்தின் விலையும் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளது.

24 கரட் தங்கத்தின் நேற்றைய விலை 180,000 ரூபாவாக காணப்பட்ட நிலையில், அதன் இன்றைய விலையாக 175,000 ரூபா பதிவாகியுள்ளதாக செட்டியார் தெருவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleமகிழ்ச்சியான மக்கள் வாழும் பட்டியலில் இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Next articleஇலங்கையில் விற்பனை செய்யப்படும் சாக்லேட் வகைகள் குறித்து தேடுதல்