இலங்கையில் விற்பனை செய்யப்படும் சாக்லேட் வகைகள் குறித்து தேடுதல்

நாட்டில் , அமுலில் உள்ள உணவு சட்டத்தை மீறி விற்பனை செய்யப்படும் சகல சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளையும் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இனிப்பு மற்றும் சொக்லேட் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சில வர்த்தகர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு சொக்லேட் மற்றும் பல்வேறு இனிப்பு வகைகளை கொண்டு வந்து விற்பனைக்கு விநியோகம் செய்வதாக தெரிய வந்துள்ளது.

உணவுச் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, விற்கப்படும் உணவுப் பொருட்களில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது? உற்பத்தியாளர் மற்றும் உற்பத்தி திகதி மற்றும் காலாவதி ஆகியவை இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் இரண்டு மொழிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

அத்தகைய குறிப்புகளுடன் விற்கப்படும் உணவுப் பொருட்கள் சட்டப்பூர்வமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே காட்சிப்படுத்த முடியும்.

எனவே, சிலர் உணவு சட்டத்தை மீறி சாக்லேட் மற்றும் இனிப்புகளை விற்பனை செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

எதிர்வரும் நாட்களில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்படும் சகல சாக்லேட்கள் மற்றும் இனிப்புப் பொருட்களையும் கைப்பற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்துளளார். 

Previous articleஇலங்கையின் தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்
Next articleஇன்றைய ராசிபலன்22.03.2023