பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்கள் விடுதலை!

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில், கைது செய்யப்பட்டு எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாமல் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிரேஸ்ட வழக்கறிஞர் ரத்தினவேலின் மேற்பார்வையில் வழக்கறிஞர் கணேஸ்வரனால் வாதாடப்பட்டு இந்த வழக்கில் ஐந்து வருடங்களின் பின்னர்11 சந்தேக நபர்களில் 9 சந்தேக நபர்கள் நேற்றைதினம் விடுதலை செய்யப்பட்டார்கள் .

குறிப்பாக 1.விஜயகுமார் கேதீஸ்வரன் 2.அரியரத்தினம்காந்தராசா 3.அன்பரசன் ஹரிஹர ராஜ் 4.இளங்கரத்தினம் B 5.கிருஷ்ணசாமி முத்து ராசா 6.ரூபகாந்தன் 7.ரகுவரன் 8.உதயசீலன் 9.புஷ்ப தேவன் ஆகியோர் முல்லை தீவு ஒட்டி சுட்டான் பகுதியில் வைத்து வெடி பொருட்களுடன் தொடர்புபட்டார்கள் என பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டுடன் பயங்கரவாத தடுப்பு பிரிவு நாள் 2018 -6 -21 தொடக்கம் 2018 – 6 -26 வரை தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட நபர்களும் இன்று 2023-3-21எவ்வித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாமல் ஒன்பது பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் .

மற்ற இரண்டு நபர்களும் விடுதலை செய்யப்படவில்லை

இதன்படி ரத்னவேல் சட்டத்தரணி சட்டத்தரணி கணேஸ்வரன் ஆகியோர் தீவிர முயற்சியினால் விடுவிக்கப்பட்டனர் . மற்ற இரண்டு நபர்களையும் விடுவிப்பதற்காக சட்டத்தரணிகள் இருவரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .அத்துடன் விரைவில் விடுதலை ஆவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

Previous articleசர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Next articleதிடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு!