திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், ஒன்றில் மாணவன் ஒருவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த மாணவன் களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவரே ஆவர்.

மேலும் குறித்த மாணவன் பாடசாலையில் உள்ள சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளை திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சுருண்டு வீழ்ந்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த, மாணவன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர் எனினும் குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்கள் விடுதலை!
Next articleயாழில் மேல்மாடியில் இருந்து வீசப்பட்ட மூன்று மாத குழந்தை