ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவர்: டி20 உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

aus_t20_team_001 (1)இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டி20 உலகக்கிண்ண திருவிழா இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஏற்கனவே டி20 அணியின் அணித்தலைவராக இருந்த ஆரோன் பின்ஞ் நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் தலைவராகவும் இருக்கிறார்.

அதேபோல் விக்கெட் கீப்பர் மேத்யூ வாடே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டெஸ்டில் விக்கெட் கீப்பராக பணியாற்றும் பீட்டர் நெவல் சேர்க்கப்பட்டுள்ளார்.

தவிர, ஆஸ்டன் ஆதர், ஆடம் ஜம்பா ஆகியோர் முதன்முறையாக டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், காயம் அடைந்த ஆரோன் பிஞ்ச், நாதன் கோல்ட்டர், பல்க்னெர் ஆகியோரும் அணிக்கு தெரிவாகியுள்ளனர்.

டி20 உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணி:-

ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், வாட்சன், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஆஸ்டன் அகர், உஸ்மான் குவாஜா, பீட்டர் நெவல், பல்க்னெர், ஹாஸ்டிங்ஸ், நாதன் கோல்ட் டர், ஹாசல்வுட், ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா.

Previous articleஇந்த விஷயத்தில் மட்டும் அஜித்தும், விஜய்யும் இணைந்துள்ளனர்?
Next articleசரண்யா உடலில் தொடரும் மர்மம்….