இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்திய கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘ஸ்பா மேடம்’ என அழைக்கப்படும் இந்த பெண் எல்ல பிரதேசத்தில் இருந்து தனது 17வது வயதில் கொழும்புக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

பெண் தொடர்பில் வெளியான தகவல் 

28 வயதான இந்த பெண் தற்போது பத்தரமுல்லை மற்றும் தலங்கம பிரதேசங்களில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் 04 தவறான விடுதிகளை நடத்தி வருவதாக மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்லை முப்பாலம் சந்திக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதியை மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இயங்கி வந்த இந்த தகாத தொழிலை நடத்தும் விடுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விடுதியின் தினசரி வருமானம் 282,000 ரூபா என்று மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

பணத்தை கைப்பற்றிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர். இந்த பெண் ராஜகிரியில் உள்ள விசாலமான வீட்டில் வசிப்பதாகவும் அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇலங்கைக்கு வர இருக்கும் தொழில் நிறுவனங்கள்
Next articleஇந்தியாவில் மீண்டும் கொரொனோ தொற்று அதிகரிப்பு!