இந்தியாவில் மீண்டும் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

இந்தியாவில் கொரொனோ தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது .

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

24 மணித்தியாலத்தில் இந்தியா முழுவதும் ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவில் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. நாளாந்தம் கொரோனா பரவலின் வீதமும் 1 .9 சதவீதமாக அதிகரித்துள்ளது.  

இவ்வாறான நிலையில், இன்றைய ஆலோச கூட்டத்தில் கொரோனா மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்  ஆலோசிக்கப்பட உள்ளது.

Previous articleஇளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்திய கோடீஸ்வர பெண் கைது!
Next articleபாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!