திடீரென இடம்பெற்ற விபத்தில் பலியான ஐந்து வயது சிறுமி; தாயின் கரு கலைப்பு !

திடீரென இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.

ஹட்டன் அவிசாவளை வீதியிலுள்ள கித்துல்கல எங்ரியாவத் என்ற இடத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்றது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று பிற்பகல் 3.20 மணியளவில் தாய், தந்தை மற்றும் மேற்படி சிறுமி ஆகியோர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.

எதிர்திசையில் பயணித்த வானொன்று ஓட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஆட்டோவில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த சிறுமி கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அன்று இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாய் கர்ப்பமாக இருப்பதாகவும், கருவும் கலைக்கப்பட்டுள்ளதால் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleமாணவியை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!
Next articleபிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ் பெண்!