யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் 10 படகுகள் தற்போது தொழிலுக்கு ஈடுபடுத்தப்படாமல் நீண்டகாலமாக கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 படகுகளும் நேற்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
குறித்த படகுகளுக்கு உரிமையாளரான புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபரரே ஆவர்
படகுகள் எரித்தமைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை . இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.