வவுனியாவில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன்

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டில் எவரும் இல்லாத போது குறித்த இளைஞன் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டார் வந்த போது குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து நெளுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Previous articleயாழில் தீக்கிரையாக்கப்பட்ட படகுகள்
Next articleதேர்தல்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்