இலங்கை பெண்களுக்கு உதவ முன்வரும் பிரபல நாடு!

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்காக மனிதாபிமான உதவிகளை வழங்க ஜப்பான் 1.06 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டுவோம் என்ற செயற்றிட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் பெண்கள் பிரிவினூடாக ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இந்த நிதி மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு உள்ளான 1200-க்கும் அதிகமான பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

Previous articleநாட்டில் பலர் வேலை இழக்கும் அபாயம்!
Next articleஎரிபொருள் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!