ஞானசார தேரருக்கு பிணை – பிணையில் வந்த தேரர் மீண்டும் உள்ளே !

ganatherarஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு சற்றுமுன்னர் பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மேலதிக வழக்கு விசாரனையை இம்மாதம் இருபத்து மூன்றாம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி ரங்க விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் வந்த தேரர் மீண்டும் உள்ளே !

முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரண்டு லட்சம் இரு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்ட தேரருக்கு ஊடகவியளாலர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுருத்திய வழக்கில் நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதீ ரங்க விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார்.

Previous articleஜெயலலிதாவை தாக்கிய நோய் மகிந்தவிற்கு…? பயத்தில் ஷிரந்தி..!
Next articleஎக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு!– புலனாய்வு பிரிவு