எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு!– புலனாய்வு பிரிவு

prageeth_CIஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம நீதிமன்றில் நேற்று எக்னெலிகொட வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எக்னெலிகொட கிரித்தலே முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு அதன் பின்னர் கண்களை கட்டி அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு அழைத்துச்சென்று கொலை செய்யப்பட்டமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம எழுந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி கிரித்தலே முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட எக்னெலிகொட முதலாம் சந்தேக நபரான லெப்டினன் கேணலினால் அழைத்துச்செல்லப்பட்டமைக்கு சாட்சியங்கள் உண்டு.

முகாமின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் சாட்சியங்கள் இதனை உறுதி செய்கின்றன.

லெப்டினன் கேணல் அர்ஜூன குமாரரட்ன, ரவீந்திர ரூபசிங்க, சார்ஜன்ட் கனிஸ்க குணரட்ன போன்றவர்கள் இந்த கடத்தலுடன் தொடர்பு பட்டிருப்பது சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தொலைபேசி அழைப்பு விபரங்களின் அடிப்படையில் கிரித்தலே முகாமிலிருந்து, அக்கரைப்பற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் இரண்டு நாட்களின் பின்னரே மீண்டும் முகாமிற்கு சந்தேக நபர்கள் திரும்பியுள்ளனர் என புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விசாரணைகளுக்கு அரச அதிகாரிகள் விசாரணையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதாகவும், விசாரணை செய்யும் அதிகாரிகளை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மனு எதிர்வரும் 23ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Previous articleஞானசார தேரருக்கு பிணை – பிணையில் வந்த தேரர் மீண்டும் உள்ளே !
Next articleமுறிந்து போன 2 வருட காதல்! கோஹ்லி- அனுஷ்கா உறவில் பிளவு