சிங்கள இளைஞர்கள் தொடர்பில் யாழ். மாணவன் வெளியிட்ட தகவல்!

சிங்கள இளைஞர்கள் மத்தியில் உள்ள வன்கொடுமைச் சட்டத்தை நீக்கும் எண்ணம் தமிழ் மக்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் கபில்ரன் போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மக்கள் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் இன்று (25) நடைபெற்றது.

இந்தநிலையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேச்சாளர் வசந்தமுடிகே தலைமையில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கபில்ரன் போல்ராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களுக்காக போராடிய போது அடித்து ஒடுக்கப்பட்டனர். அதன் ஒரு அங்கமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நமது எண்ணங்கள் மௌனமாகி, செயல்கள் மௌனமாகி, நமது தேடல்கள் மௌனமாகி, மௌனமான சமூகமாக நாம் மௌனமாகி விடுகிறோம்.

இந்த எண்ணம் வெல்லப்பட வேண்டும். தொடர்ந்து போராடி வருகிறோம். 30 வருடங்களுக்கு முன்பு எங்கள் அப்பா போராடினார், 30 வருடங்கள் கழித்து நான் கஷ்டப்படுகிறேன், இப்போது என் மகனும் போராடுவான். போராட்டமே நம் வாழ்வின் தேடல் என்றார்.