கிளிநொச்சி பகுதியில் கசிப்பு போத்தல்களுடன் கைதான பெண்!

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் 54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னை நீராவி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் வீதிச் சோதனை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற பொழுது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 54 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பினை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன தருமபுர பொலிஸார் பறிமுதல் செய்துள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரை இன்றைய தினம் (26-03-2023) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleநாளை முதல் பால் தேநீரின் விலை குறைப்பு!
Next articleதொலைபேசி விற்பனை குறித்து பதிவாகியுள்ள முறைப்பாடு!