பத்து தல திரைப்படத்தில் நடனமாட சாயிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பத்து தல

நடிகர் சிம்பு  நடிப்பில் உருவாகியுள்ள “பத்து தல” திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வருகின்ற மார்ச் 30 -ம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி, கவுதம் வாசுதேவ் மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இசைபுயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் பத்து தல படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சம்பளம்

பத்து தல படத்தில் இடம் பெற்றுள்ள ரவுடி என்ற பாடலுக்கு நடிகை சாயிஷா படுகவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்நிலையில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடுவதற்கு சாயிஷா ரூபாய். 40 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

Previous articleநாட்டிலுள்ள 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்
Next articleகனடாவில் திருடப்பட்ட கார்கள் பிறிதொரு நாட்டில் மீட்பு!