எரிபொருள் விநியோகம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்த போதிலும் தற்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது.

மேலும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் அனாவசியமாக வரிசையில் நிற்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Previous articleயாழில் ஆசிரியரின் வீட்டை உடைத்து திருட்டு!
Next articleவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!