யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட பத்து பேர் கைது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் வியாபாரியிடம் ஹெரோயின் வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும், கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் போதைப் பொருள் வியாபாரி நீண்ட காலமாக போதை பொருள் விற்று வருகின்றமை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றி வளைக்கப்பட்டு போதை பொருள் வாங்கியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஅவுஸ்ரேலியாவில் இலங்கையர்கள் நிகழ்த்திய சாதனை
Next articleபேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!