டி காக், அம்லா மிரட்டல் சதம்: இங்கிலாந்தின் இமாலய இலக்கை எளிதில் எட்டிய தென்ஆப்பிரிக்கா

sa_win_002இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.
தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அந்த அணியின் ஜோ ரூட் அதிரடியாக விளையாடி 113 பந்தில் 125 ஓட்டங்கள் (10 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார்.

தவிர, ஹால்ஸ் (65), ஸ்டோக்ஸ் (53) அரைசதம் அடித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 318 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 319 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரர்கள் டி காக், அம்லா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

நிதானமாக ஆடிய இருவரும் சதம் விளாசி மிரட்டினர். டி காக் 117 பந்தில் 135 ஓட்டங்களும் (16 பவுண்டரி, 4 சிக்சர்), அம்லா 130 பந்தில் 127 ஓட்டங்களும் (13 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

டுபிளசி தன் பங்கிற்கு 33 ஓட்டங்கள் குவிக்க 46.2 ஓவர்களிலே தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் மட்டும் இழந்து 319 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. டி காக் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது.

Previous articleதுப்பாக்கி சூட்டில் மூவர் படுகொலை.
Next article14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை:ஐ.எஸ். தீவி­ர­வா­திகள்