மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் பலி !

நாவற்குடா விபத்தில் 17 வயது இளைஞன் பலி : மோதிய வான் தப்பிச்சென்றுள்ளது.

நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சுங்காவிலைச்சேர்ந்த காத்தான்குடியில் படிக்கும் 17 வயது இளைஞன் அன்பாஸ் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

சுங்காவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்பாஸ் நாவற்குடா தொழிநுட்பக்கல்லூரி மாணவன் என்பதுடன், தனது கல்வியைத்தொடர காத்தான்குடியிலுள்ள தனது தாயாரின் சகோதரரின் வீட்டில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்துள்ளார்.

நேற்றைய தினம் (27) துவிச்சக்கர வண்டியில் தனது நண்பருடன் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச்செல்லும் வழியில் காத்தான்குடி, நவற்குடா பகுதியில் அன்பாஸ் பயணித்த துவிச்சக்கர வண்டியின் மீது வேனொன்று மோதி விட்டு தப்பிச்சென்றுள்ளது.

இதன் போது குறித்த வேனின் இலக்கத்தகடு கழன்று விழுந்துள்ளது.
விபத்துக்குள்ளான நண்பரை மற்றைய நண்பர் வீதியால் சென்ற ஏனைய சகோதரர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததுள்ளார்.
மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleயாழில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
Next articleஇளம்பெண்ணை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற முதியவர்: தள்ளிவிட்டதில் அந்த இடத்தில் விழுந்தே பலி!