நெல்லியடி பொலிஸ் பிரிவில் கஞ்சா பொதியுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேவரையாளி பகுதியில் கஞ்சா பொதி கைமாற்றப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.
இளைஞன் கஞ்சா பொதியை பிறிதொருவருக்கு வழங்குவதற்காக வீதியோரம் காத்திருந்த போது கைதாகினார். அவரிடமிருந்து 2.09 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டது.
வியாபாரிமூலை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே கைதாகினார்.