14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை:ஐ.எஸ். தீவி­ர­வா­திகள்

ISIS-Beheads-14-Year-Old-Boy-in-Front-of-Parentsஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றிய 14 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு அவ­னது பெற்றோர் முன்­னி­லையில் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த சனிக்கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­தண்­டனை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

வட சிரி­யா­வி­லுள்ள ஜரா­புலஸ் நகரைச் சேர்ந்த மேற்­படி சிறுவன் அந்­ந­க­ரி­லுள்ள மத்­திய பள்­ளி­வா­சலில் கடந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றி­ய­தை­ய­டுத்து கைது செய்­யப்­பட்டான்.அவன் மீது மத எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டமை மற்றும் மதத்தைக் கைவிட்­டமை போன்ற குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

இத­னை­ய­டுத்து அந்த சிறு­வ­னுக்கு அவன் தாய் மற்றும் தந்தை உள்­ள­டங்­க­லான பெருந்தொகையான மக்கள் முன்னிலையில் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleடி காக், அம்லா மிரட்டல் சதம்: இங்கிலாந்தின் இமாலய இலக்கை எளிதில் எட்டிய தென்ஆப்பிரிக்கா
Next articleஇலங்கை நீதித்துறையில் நம்பிக்கை ; அல் ஹூஸைன் பல்டி?