ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து குஜராத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக உடனடி பிணையும் வழங்கியது.

தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகாவில் உள்ள கோலாரில் நடந்த பேரணியில் பேசும் போது, “நீரவ் மோடி, லலித் மோடி மற்றும் நரேந்திர மோடி… அவர்கள் அனைவருக்கும் பொதுவான குடும்பப்பெயர்கள் எப்படி வந்தது? எல்லா திருடர்களுக்கும் மோடி என்று குடும்பப்பெயர்கள் இருப்பது எப்படி?” என ராகுல் கேள்வியெழுப்பியிருந்தார்.

,ந்த வழக்கில், ராகுல் குற்றவாளியென குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றம் இன்று தண்டனை விதித்தது. 2 வருட சிறை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்தது.

ராகுல் மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் பிணையும் வழங்கியது.