கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு!

 கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் நான்கு பதின்ம வயதினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் மானிடோபா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் கார் ஒன்றும் ட்ரக் வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் ஐந்து பதின்ம வயதினர் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கார் நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் நிறுத்தாது பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

18 வயதான சாரதியும், 17 வயதான இரண்டு ஆண் பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 18 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 15 வயதான மற்றுமொரு சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ட்ரக் வண்டியை செலுத்திய நபருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் மானிடோபாவின் சிறிய கிரமமான கில்பர்ட் பிளேய்ன்ஸ் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Previous articleமின் கட்டணங்களில் மாற்றம் ஏற்ப்படும் வாய்ப்பு!
Next articleபாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை