யாழில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய இளைஞன் சிக்கினார்!

யாழ்ப்பாணம் இடைக்காட்டு பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞரொருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் செலுத்தி வந்த சொகுசு காரும் 18 கிலோகிராம் போதைப்பொருளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Previous articleயாழ் மண்டைதீவில் பலப்படுத்தப்படும் சோதனை சாவடி!
Next articleஇன்றைய ராசிபலன்01.04.2023