வவுனியாவில் லிங்கத்துடன் வெட்டுக்குநாறி மலைக்கு சென்ற ஜீவன்!

சேதமடைந்த வவுனியா வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் கோவிலுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் சென்றிருந்தார்.

அவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பழுதடைந்த ஆதிசிவன் கோவிலை புனரமைப்பதாக அறிவித்த அமைச்சர் ஜீவன், லிங்கம் உள்ளிட்ட சில சிலைகளையும் எடுத்துச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை நடவடிக்கை எடுக்கப்படாது என முன்னாள் ஜனாதிபதியின் இந்து சமய ஆலோசகர் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

Previous articleஉயிர்மாய்க்க முயன்ற ஈழ அகதிகளில் இருவருக்கு மூன்றாம் நாட்டில் தஞ்சம் கோர பிரிட்டன் அனுமதி!
Next articleயாழ் காங்கேசன்துறையில் விரைவில் தொடங்கும் படகுச் சேவை!