வவுனியாவில் 20 வயது இளைஞன் அதிரடியாக கைது ! வெளியான காரணம் !

இன்று (02-04-2023) வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலுப்பையடி பிரதேசத்தில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த புதன்கிழமை (29-03-2023) குறித்த நிலையத்தில் வங்கி வைப்பிற்காக தயார் செய்யப்பட்டிருந்த 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.கஜேந்திரன் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்க (60945), பொலிஸ் கான்ஸ்டபிள்களான தயாளன் (91792) மற்றும் சியான் (105139) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டது. – பொறுப்பு JAAS ஜெயக்கொடி விசாரணைகளை நடத்தியிருந்தார். .

விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி வர்த்தக நிலையத்தில் பணிபுரிய கொழும்பு சென்றிருந்த இளைஞனை பொலிசார் நுட்பமாக அழைத்து வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பணத்தில் 9 இலட்சம் ரூபா குறித்த இளைஞரின் வங்கியில் இருந்ததாகவும், மேலதிகமாக 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவை அவர் செலவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா நீலியாமோட்டை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞனை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.