ரசிகரிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கோவிந்தா

actor_govinda_002 (1)பாலிவுட் நடிகர் கோவிந்தா, தன்னுடைய ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் இழப்பீடு தொகை வழங்கவும் சம்மதித்துள்ளார்.

பாலிவுட் நடிகரான கோவிந்தா தனது நடனத்தின் மூலம் பிரபலமானவர்.

இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி படப்பிடிப்பில் இருந்த போது சந்தோஷ் படேஷ்வர் என்ற ரசிகரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சந்தோஷ் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், ஆனால் அதை நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியதுடன், ஆதாரமாக வீடியோ ஒன்றையும் கொடுத்தார்.

இது உண்மையல்ல என கோவிந்தா தரப்பில் வாதம் செய்தாலும், அதனை நிராகரித்த நீதிமன்றம் கோவிந்தா ரசிகரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடந்தாண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சந்தோஷிடம் நடிகர் கோவிந்தா மன்னிப்பு கேட்க தயார். ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தயார் என்று தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து நேற்று நிருபர்களை சந்தித்த கோவிந்தா, தான் அறைந்ததாக கூறப்படும் சந்தோஷிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார்.

மேலும் நீதித்துறை சொன்ன எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன், அந்த ரசிகர் மீது எனக்கு கசப்புணர்வு எதுவும் இல்லை. அவரது திருப்திக்காகவும், நீதித்துறையின் திருப்திக்காகவும் எல்லாவற்றையும் செய்தேன் என்று தெரிவித்தார்.

ஆனால் சந்தோஷிற்கு எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது என்ற விவரத்தை கூற நடிகர் கோவிந்தா மறுத்துவிட்டார்.

Previous articleயார் இப்படியெல்லாம் சொல்கிறார்கள்- ஹன்சிகா கடும் கோபம்
Next articleஇந்திய அணியை பந்தாடிய ராஜித்த யார்..? சுவாரஸ்ய பதிவுகள்