அப்பாவின் பதவி நிரந்தரமில்லை – சத்துரிக்கா சிறிசேன..!

Chathurika-Sirisena12 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன. தந்தைக்கு இணையாக அவரது மகள் சத்துரிக்கா சிறிசேன, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தனது தந்தையின் ஜனாதிபதி பதவி நிரந்தரமில்லை என, அவரின் மகளான சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று இருக்கும் பதவி நாளை இல்லாமல் போகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தையின் பதவி நிரந்தரம் இல்லை என்பதனால் சமூகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு தனது முழு குடும்பமும் சமூக சேவையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதி, மதம், பேதம் பாராமல் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு வலு சேர்ப்போம். 2020 ஆம் ஆண்டு வரும் போது மது அற்ற நாடாக உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.
பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாத பயிர்க்செய்கைகளை மேற்கொண்டு சிறுநீரக நோய்களில் இருந்து எங்கள் நாட்டு மக்களை காப்பாற்றி கொள்வதே எங்கள் நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் 120 விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சத்துரிக்காவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 30 பேர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் வெலிகந்தை பொலிஸ் நிலையத்தின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சேனபுர மகாவலி சேனபுர பிரதேச அலுவலகம் மற்றும் பிரதேச மத தலைவர்கள், அரசாங்க நிறுவனத்தின் பிரதானிகள் கலந்து கொள்வது கட்டாயம் என நிறுவனங்களின் பிரதானிகளுக்கு உத்தரவு ஒன்றும் அனுப்பி

Previous articleஇந்திய அணியை பந்தாடிய ராஜித்த யார்..? சுவாரஸ்ய பதிவுகள்
Next articleஎட்டு மஹிந்த அணி பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் ஆப்பு…!