யாழில் காரில் பயணித்தவரை மறித்து வாள்வெட்டு!

கார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்ணாகம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிஸார் 25 மற்றும் 30 வயதுடைய இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Previous articleஎரிபொருள் விலை குறைவடையும் வாய்ப்பு!
Next articleவவுனியா செட்டிக்குளத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை !