வவுனியா செட்டிக்குளத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை !

வவுனியா செட்டிக்குளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09.04) திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம் – மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக, வீதியோரத்தில் சிமென்ட் கற்களால் சுமார் ஒன்றரை அடி உயர புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பகுதிக்கு வந்த சிலர் புத்தர் சிலையை கற்களை அடுக்கி வைத்து விட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் குறித்த பிரதேசத்தில் தமிழ் மக்கள் வாழ்கின்றமையும் மேற்படி சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகாமையில் செட்டிக்குளம் முருகன் ஆலயம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் காரில் பயணித்தவரை மறித்து வாள்வெட்டு!
Next articleஇலங்கை மக்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு!