கோஹ்லியின் சாதனையை முறியடித்த குயின்டான் டி காக்

decock_001தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரரான குயின்டான் டி காக் குறைந்த வயதில் 10 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதில் குயின்டான் டி காக் 117 பந்தில் 135 ஓட்டங்களும் (16 பவுண்டரி, 4 சிக்சர்), அம்லா 130 பந்தில் 127 ஓட்டங்களும் (13 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இது குயின்டான் டி காக்கிற்கு 10வது சதம் ஆகும். இதன் மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் 10 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

டி காக்குக்கு தற்போது வயது 23 ஆண்டு 54 நாள். இதற்கு முன்பு இச்சாதனையை இந்தியாவின் விராட் கோஹ்லி செய்த போது அவருக்கு வயது 23 ஆண்டு 129 நாட்களாக இருந்தது.

மேலும், இதை கோஹ்லி 80 இன்னிங்ஸ்கள் எடுத்துக் கொண்டார். ஆனால் டி காக் தனது 55வது இன்னிங்ஸிலே இந்த இலக்கை எட்டியுள்ளார்.

Previous articleகடுவலை நீதிமன்றில் யோசித! 25ம் திகதி வரை விளக்க மறியல்!
Next articleஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?