இலங்கையில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் சில சம்பவங்கள் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதனை உறுதிப்படுத்தி வருகின்றது.
சிறுவர்கள் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வரும் நிலையில் ஆணொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு , கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கொடகவெல, கொஸ்வெடிய , சுதுகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தரே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் இரத்தினபுரியிலிருந்து – எம்பிலிப்பிட்டிய நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் எரிபொருள் தீர்ந்துள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த இளைஞனொருவர் எரிபொருள் பெற்றுத்தருவதாக கூறி , ஆள் அரவமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் கிராம உத்தியோகத்தரின் கழுத்தில் கத்தியை வைத்து அவரை கொலை செய்வதாக எச்சரித்து தாக்கியுள்ளார்.
அதுமட்டுமன்றி கைப்பேசி மூலம் அழைத்து வேறொருவரையும் அப்பகுதிக்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து கிராம உத்தியோகத்தரை துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் , அவரது 22,000 ரூபா பெறுமதியான கையடக்கத்தொலைபேசியையும் கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் வங்கி ஏ.டி.எம் அட்டையை பெற்று, அதனை எடுத்துச் சென்று சுமார் 40 ஆயிரம் ரூபா பணத்தினையும் எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.