திலகரத்னவின் முதல் மனைவி நீதிமன்றத்தில்

sportsகொழும்பு 9 மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் பிரபல கிரிக்கெட் வீரர் திலக்கரத்ன டில்சானுக்கு நேற்று பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சினையொன்றுக்காக அவரது முதலாவது மனைவியினால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாதிருந்தமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் வெளிநாட்டில் இருப்பதாக இவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும், அவர் உள்நாட்டில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் இதனாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous articleமயிரிழையில் உயிர் தப்பிய வடக்கு முதல்வர் சீ.வி
Next articleஅஜித், விக்ரம் தான் என் பேவரட்- பிரபல நடிகை