அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் குற்றப்புலானய்வு பிரிவினரால் கொழும்பு விமானநிலையத்தில்வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக செல்லமுயன்றவர்கள் எனவும் இதன் காரணமாக நாடு கடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.இவர்களை நீதிமன்றத்தில ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.