இலங்கையில் உள்ள குரங்குகள் குறித்து நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் உள்ள குரங்கு ஒன்றை பிடிப்பதற்காக மாத்திரம் சுமார், 5 ஆயிரம் ரூபா வரையில் செலவிடுவதற்கு சீனா தயாராகவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இலங்கையிலுள்ள குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் சீன அரசாங்கம் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

சீனாவில் உள்ள மிருககாட்சிசாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலேயே சீனாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர்,

இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பதற்கும், அதனை சீனாவிற்கு கொண்டு செல்வது வரையான அனைத்து செலவீனங்களையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குரங்குகளை பிடித்து, அதனை தனிமைப்படுத்தி, நோய்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து, கூடுகளில் அடைத்து, சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழு செலவினத்தையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையில் இருந்து குரங்குகளை 50 ஆயிரம் ரூபா செலவளித்து சீனாவிற்கு கொண்டு சென்று, அந்த குரங்கை இறைச்சிக்காக பயன்படுத்துவார்களாயின் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து ஒரு லட்சம் ரூபாவிற்கே விற்க வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்ட அமைச்சர் ஒரு லட்சம் ரூபாவை செலவிட்டு, குரங்குகளை சீனர்கள் உட்கொள்ளமாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.