வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல்!

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றைய தினம் (15-04-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இருவேறு பிரபல பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் முரண்பாடாக மாறிய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் இரு மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் மாணவன் ஒருவரின் பெற்றோர் தலையிட்டு சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்பின் நேற்று மாலை மாணவனின் வீட்டுக்குள் புகுந்த மற்றைய மாணவன் உள்ளிட்டோர் குறித்த வீட்டில் வசித்த மாணவன் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனால் காயமடைந்த 16 வயது மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இரு பகுதியினரும் 16 தொடக்கம் 17 வயதான மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleபாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Next articleபோலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைந்த இருவர் குறித்து வெளியாகியுள்ள செய்தி!