மெக்சிகோ சிறையில் கலவரம்: 52 பேர் பலி

masekoமெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள மான்டெர்ரி நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் திடீரென கைதிகளுக்கு இடையே பயங்கர கலவரம் மூண்டது.

கைதிகள் ஒருவரையருவர் தாக்கிக்கொண்டதுடன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கினர். இந்த பயங்கர கலவரத்தில் போலீசார் உள்பட 52 பேர் பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கலவரத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காத நிலையில், சிறையில் இருந்து கைதிகள் சிலர் தப்பிக்க முயன்ற போது ஏற்பட்ட வன்முறையே இந்த கலவரத்துக்கு காரணம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே கலவரம் குறித்து அறிந்ததும், அந்த சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Previous articleகபாலி டீசர் தேதி இதோ- ரசிகர்கள் கொண்டாட்டம்
Next article‘காதலர் தினத்தில்’ அதிகம் செலவிடுவது… ஆண்களா… பெண்களா…?