ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு 25ம் திகதி வரையில் விளக்கமறியல்

downloadதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டது.

சந்தேக நபர்களை 25ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

பிரதீப் சமிந்த, காமினி செனவிரட்ன மற்றும் பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்பய்பட்ட சம்பத் முனசிங்கவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

அரச தரப்பு சாட்சியாளராக மாறிய சம்பத் பிரிதிவிராஜிடம் நேற்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

உயிர் அச்சுறுத்தல் நீங்கிய நிலையில் தாம் அரச தரப்பு சாட்சியாளராக மாறி சாட்சியளித்துள்ளதாகவும், ஆரம்பத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பொய்யான சாட்சியங்களை புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கியதாகவும் பிரிதிவிராஜ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 25ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

2006ம் ஆண் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டிருந்தார்.

Previous article‘காதலர் தினத்தில்’ அதிகம் செலவிடுவது… ஆண்களா… பெண்களா…?
Next articleஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை 2017ல் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படும்